செய்திகள் (Tamil News)

பா.ஜனதா- சமாஜ்வாடி ரகசிய உடன்பாடு: மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2017-01-15 09:20 GMT   |   Update On 2017-01-15 09:20 GMT
சமாஜ்வாடி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதிவரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

403 தொகுதிகளை கொண்ட அங்கு ஆளும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜனதா ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

முன்னாள் முதல்- மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி ஏற்கனவே அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அவர் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

உத்தரபிரதேச தேர்தலில் எந்த கட்சியுடனும் இணைந்து பகுஜன் சமாஜ் போட்டியிடாது. தனித்து போட்டியிடுவோம்.

காங்கிரஸ் கட்சியை பற்றி கவலைப்படவில்லை. அந்த கட்சி செயற்கை சுவாச கருவியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. சமாஜ்வாடி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

Similar News