செய்திகள் (Tamil News)

உ.பி. சட்டசபை தேர்தல்: இலவச ஸ்மார்ட் போன் திட்டத்திற்கு எதிராக பா.ஜ.க புகார்

Published On 2017-01-15 15:30 GMT   |   Update On 2017-01-15 15:30 GMT
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ‘ஸ்மார்ட் போன்’ வழங்கும் திட்டத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க இன்று புகார் அளித்துள்ளது.
லக்னோ;

உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். 18 வயதுக்கு மேற்பட்ட, 10-ம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும். அதற்கான தகுதி உடையவர்கள் அரசின் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும் என அறிவித்திருந்தார்.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் திட்டத்திற்கான பதிவு இன்னும் தொடர்வதாக பா.ஜ.க வினர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

மேலும் உத்தர பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் அகிலேஷ் யாதவ் புகைப்படம் உள்ளதாகவும், அது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது எனவும் பா.ஜ.க வினர் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

Similar News