செய்திகள் (Tamil News)

விவசாயக் கடனுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2017-02-01 06:26 GMT   |   Update On 2017-02-01 06:41 GMT
விவசாயக் கடனுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவையில் அருண் ஜெட்லி இன்று 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை அறிவித்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

1. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையில் இருந்து விடுவிக்க புதிய திட்டம்

2. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு

3. சிறுகுறு விவசாயிகள் எளிதில் கடன் பெற வழிவகை

4. விவசாய கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக வழங்க இலக்கு

5. பால் பொருட்கள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் 8 ஆயிரம் கோடி

6. 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாய்.  (கடந்த வருடம் 38 ஆயிரத்து 500 கோடியாக இருந்தது)

7. பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த வருடம் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய்

8. வரும் 2018-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி.

9. விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும்.

10. கிராமப்புற கட்டமைப்பு மேம்படுத்த ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் (கடந்த வருடம் 87, 765 கோடி ரூபாய்)

11. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்.

12. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெண்களின் வேலை வாய்ப்பு 65 சதவீதமாக உயர்வு.

Similar News