செய்திகள் (Tamil News)

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை - பீம் ஆப் பயன்பாட்டை ஊக்குவிக்க 2 திட்டம்

Published On 2017-02-01 07:38 GMT   |   Update On 2017-02-01 07:38 GMT
மத்திய அரசின் பீம் செயலியை மேம்படுத்த 2 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று 2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மூத்த குடிமக்களுக்கு 8% உறுதியான வருவாயுடன் எல்.ஐ.சி.யில் திட்டம்

* தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ.64,000 கோடி ஒதுக்கீடு

* 1 லட்சத்து 50,000 கிராம பஞ்சாயத்துகளில் இணையதள வசதி

* மின்னணு துறைக்கு ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு

* பிராட் பேண்ட் இணையதள சேவை கிராமப் பஞ்சாயத்துகள் வரை விரிவுப்படுத்தப்படும்

* புதிதாக 2 கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்

* நாட்டின் ஒட்டு மொத்த உள்கட்டமைப்புக்கு ரூ.3,91,000 கோடி ஒதுக்கீடு

* போக்குவரத்து துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி ஒதுக்கீடு

* அந்நிய நேரடி முதலீட்டிற்கான வாரியம் நீக்கப்படும்

* அந்நிய நேரடி முதலீட்டிற்கான புதிய கொள்கைகள் வகுக்கப்படும்

* சட்ட விரோதமான முதலீடுகளை தடுக்க சட்ட மசோதா நிறைவேற்றப்படும்

* அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

* ஆதார் அடிப்படையிலான பணபரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும்

* அடுத்த 2 மாதங்களில் புதியதாக 10 லட்சம் ஸ்வைப் மிஷின்கள் வழங்கப்படும்

* சிறு கடன்களுக்கான நிதி 1.25 லட்சம் கோடியில் இருந்து 2.44 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்

* வாராக்கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி

* டிஜிட்டல் புரட்சியை அரசு மேற்கொள்ள உள்ளது.

* அரசின் பீம் செயலியை மேம்படுத்த 2 திட்டங்கள் செயல்படுத்தப்படும்

* பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் தலைமை தபால் நிலையங்களில் வழங்கப்படும்

* தலைமை தபால் நிலையங்கள் பாஸ்போர்ட் அலுவலங்களாக பயன்படுத்தப்படும்

* வங்கிகளை சீரமைக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பினாலும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

* முத்ரா திட்டத்திற்கு ரூ.2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு

* பாதுகாப்புத் துறையின் செலவு (பென்சன் தவிர) ரூ.2.74 லட்சம் கோடி.

* நிதிப்பற்றாக்குறை நாட்டில் மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்.


Similar News