செய்திகள் (Tamil News)

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2017-03-22 08:30 GMT   |   Update On 2017-03-22 08:30 GMT
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த மூன்று நோன்பாளிகள் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சுவாமி அசீமானந்தா, பவேஷ் பட்டேல் உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடப்பட்டு வந்த நான்கு பேரில் மூன்றுபேர் தலைமறைவாக இருக்கின்றனர். கடந்த 2007-ம்
ஒருவர் கொல்லப்பட்டார். இவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆறாண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கு விசாரணையின்போது 149 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இருதரப்பு வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்து.

கடந்த மார்ச் 8-ம் தேதி பட்டேல், குப்தா மற்றும் ஜோஷி ஆகிய மூன்று பேரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதி செய்து இருந்தது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஜோஷி என்பவர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு இறந்துவிட்டார். தேவேந்திர குப்தா மற்றும் ஜோஷி ஆகியோர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்.

இந்நிலையில், பவேஷ் பட்டேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கு தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், பவேஷ் பட்டேலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் குப்தாவிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



Similar News