செய்திகள் (Tamil News)

பீகாரில் கோர்ட்டு வளாகத்துக்குள் கைதி சுட்டுக்கொலை

Published On 2017-05-11 20:05 GMT   |   Update On 2017-05-11 20:05 GMT
பீகாரில் கோர்ட்டு வளாகத்துக்குள் வழக்கு விசாரணைக்காக வந்த கைதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டியா:

பீகார் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக விளங்கி வந்தவர் பப்லுதுபே. முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 2 என்ஜினீயர்களை பப்லு துபே படுகொலை செய்தார். இது தவிர ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளார்.

போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக போலீசார் பப்லு துபேவை மேற்கு சம்பரான் மாவட்ட கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் சிறையில் அடைப்பதற்காக போலீசார் அவரை வெளியே அழைத்து வந்தனர்.

பப்லு துபே கோர்ட்டு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பப்லு துபே ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News