செய்திகள்

பாஜகவுக்கு பரிசளிக்க அமேசானில் எம்எல்ஏக்களை விலைக்கு கேட்ட இளைஞர்

Published On 2018-05-17 22:21 GMT   |   Update On 2018-05-17 22:21 GMT
இளைஞர் ஒருவர் அமேசான் இணையதளத்தில் பாஜகவுக்கு பரிசளிக்க மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு கேட்டுள்ளார்.

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இதனிடையே இளைஞர் ஒருவர், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கின் வாடிக்கையாளர் உதவி மையத்திற்கான டுவிட்டர் கணக்கிற்கு  ஒரு டுவிட் செய்துள்ளார். அதில், தனக்கு ஷாப்பிங் செய்வதில் சிக்கல் உள்ளதாக கூறியிருக்கிறார். இதையடுத்து சிக்கல் குறித்து அமேசான் நிறுவனம் கேட்டுள்ளது. 

அதற்கு, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் 7 எம்எல்ஏக்களை வாங்கி, அவர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பரிசளிக்க வேண்டும், ஏதாவது நல்ல டீல் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது, அந்த டுவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 



மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால் ஐதராபாத் நகருக்கு இடம்மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News