செய்திகள் (Tamil News)

வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா - மம்தா பானர்ஜி சந்திப்பு

Published On 2018-05-26 17:32 GMT   |   Update On 2018-05-26 17:32 GMT
மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா, முதல் மந்திரி மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார். #SheikhHasina #MamataBanarjee
கொல்கத்தா:

வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு வந்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் பகுதியில் விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் ‘பங்களாதேஷ் பவன்’ கட்டிடத்தை ஷேக் ஹசினா திறந்து வைத்தார்.

மேலும், வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா,  முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அலிப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், இந்தியா - வங்கதேச நாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் எல்லை பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் பேசினோம் என தெரிவித்தார். #SheikhHasina #MamataBanarjee
Tags:    

Similar News