இந்தியா (National)

ரீல்ஸ்-க்கு லைக் வாங்க இப்படி செய்யணுமா? நெட்டிசன்களை அப்செட்டாக்கிய வீடியோ

Published On 2024-10-23 15:36 GMT   |   Update On 2024-10-23 15:36 GMT
  • இந்தியா கேட் பகுதியை ரஷியாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் சுற்றி பார்க்கின்றனர்.
  • மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோவிற்கு லைக்குகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும், விசித்திரமான முயற்சிகளில் ஈடுபட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதில் சில வீடியோக்கள் வரவேற்பை பெற்றாலும், பல வீடியோக்கள் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ கடும் விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

டெல்லியின் இந்தியா கேட் பகுதியை ரஷியாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் சுற்றி பார்க்கின்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக பெண்ணிடம் சென்று நடனம் ஆடும்படி வற்புறுத்துகிறார். அதற்கு அப்பெண்மணி அமைதியாக விலகி சென்றாலும் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்கிறார். இச்சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவு செய்தனர்.

இதனிடையே சுற்றுலா பயணிகளிடம் அந்த வாலிபர் மன்னிப்பு கேட்காமல் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வாலிபர் நடனக் கலைஞரான சச்சின் ராஜ் என்று தெரியவந்துள்ளது. மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், "அவரை கைது செய்யுங்கள், அவர் வெளிநாட்டினரை துன்புறுத்துகிறார், அவருடைய மற்ற ரீல்களை சரிபார்க்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்புவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News