செய்திகள்

இணை செயலாளர் பதவி விவகாரம் தீவிரமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - சிதம்பரம்

Published On 2018-06-11 15:41 GMT   |   Update On 2018-06-11 15:41 GMT
மத்திய அரசின் இணை செயலாளர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்து பணியாளரை தேர்வு செய்ய சமீபத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் தீவிர சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய முன்னாள் மந்திரி சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Chidambaram
புதுடெல்லி :

அரசுத் துறைகளில் திறமை வாய்ந்தவர்களை அதிகரிக்கும் பொருட்டு லேட்ரல் என்ட்ரி எனும் திட்டப்படி, மத்திய அரசின் 10 துறைகளின் இணை செயலாளர் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தனியார் துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள், இணை செயலாளர் பதவிக்கு அணுகலாம் என பிரத்யேக விளம்பரத்தையும் மத்திய அரசு நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் கூறியுள்ளதாவது :-

இந்த புதிய முறை மற்றும் இதற்காக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் தீவிர சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களை துணை செயலாளர்களாக நியமிக்கும் முறை தவறானது. அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு வேண்டியவர்களாக மட்டுமே இருப்பார்கள். 

செல்வாக்கை பயன்படுத்தி இந்த பதவிகளுக்கு வருபவர்கள் மக்களுக்காக பணியாற்ற மாட்டர்கள். இது முற்றிலும் நாட்டு நலனுக்கு எதிரானது. மத்திய அரசின் இணை செயலாளர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்து பணியாளரை தேர்வு செய்யும் புதிய முறையை பற்றி விரிவாக மத்திய அரசு விளக்க வேண்டும். 

இது குறித்து விமர்சனம் செய்ய காங்கிரஸ் கட்சியிடம் அதிகமான கேள்விகள் இருந்தாலும், மத்திய அரசு கொடுக்கும் விளக்கத்தை பொருத்தே எங்கள் முடிவு அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #Chidambaram
Tags:    

Similar News