செய்திகள்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் தொடங்கியது

Published On 2018-07-27 18:36 GMT   |   Update On 2018-07-27 18:44 GMT
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கியது என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். #LunarEclipse
புதுடெல்லி:

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இரவு 11.54 மணிக்கு தொடங்கியது. இந்த சந்திர கிரகணம், நள்ளிரவு வரை நீடித்து இருக்கும். இது சுமார் 6 மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 



சந்திர கிரகணம் தொடர்பாக பேட்டியளித்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் சவுந்திரராஜ பெருமாள், இந்த சந்திர கிரணகத்தை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட சந்திர கிரகணமான இதை பொதுமக்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் காணலாம். #LunarEclipse
Tags:    

Similar News