செய்திகள்

மத்திய பிரதேசத்தில் காதலர் தினத்தில் திருநங்கையை மணந்த இளைஞர்

Published On 2019-02-15 08:55 GMT   |   Update On 2019-02-15 08:55 GMT
மத்திய பிரதேசத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர் ஒருவர் திருநங்கையை மணந்தார். #Transgendermarriage
இந்தூர்:

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசுப்பொருட்களை வழங்கியும், புத்தாடைகள் அணிந்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். விருப்பமான இடங்களுக்கு சேர்ந்து செல்வது, ரோஜாக்கள் பரிமாறிக்கொள்வது, சாக்லேட்டுகள் வழங்குவது போன்ற பல்வேறு விதங்களில் மகிழ்ச்சியுடன் காதலர் தினத்தை கொண்டாடினர்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் கான், ஜெயா சிங் பர்மர் எனும் திருநங்கையை 2 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் காதலர் தினமான நேற்று தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, திருநங்கையான ஜெயா சிங் பர்மரை, இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்து கொண்டார். மேலும் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.



தனது குடும்பம் இந்த திருமணத்தை ஏற்க வேண்டும் எனவும், அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் ஜெயா உடன்தான் நான் வாழப் போவதாகவும் மணமகன் ஜூனைத் கான் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதையடுத்து ஜுனைத்தின் பெற்றோர், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்றாவது ஒருநாள் அவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக மணமகள் ஜெயா சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #Transgendermarriage
Tags:    

Similar News