செய்திகள் (Tamil News)
ரெயில் மூலம் சொந்த மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் (பழைய படம்)

35,540 பேர் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர்: ஒடிசா அரசு தகவல்

Published On 2020-05-06 16:00 GMT   |   Update On 2020-05-06 16:00 GMT
வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்கள், பேருந்துகள், மற்ற வாகனங்கள் மூலம் இதுவரை 35 ஆயிரத்து 540 பேர் சொந்த மாநிலம் திரும்பியுள்ளதாக ஒடிசா தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் சென்று வேலைப்பார்த்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்தந்த மாநிலங்கள் அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து உணவு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் நாட்கள் நீண்டு கொண்டே செல்ல சொந்த மாநிலங்கள் திரும்பினால்தான் முடியும் என பொது இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனால் நேற்று முன்தினத்தில் (மே 6-ந்தேதி) இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரெயில்கள், பேருந்துகள், மற்ற வாகனங்கள் மூலம் பல மாநிலங்களில் இருந்து 35 ஆயிரத்து 540 பேர் சொந்த மாநிலம் திரும்பியுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

Similar News