செய்திகள் (Tamil News)
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு கேவியட் மனு தாக்கல்

Published On 2020-08-19 06:28 GMT   |   Update On 2020-08-19 06:28 GMT
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால்,  தங்களது கருத்தை கேட்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News