செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

மானபங்கம் செய்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாதம் ரூ.60 ஆயிரம் தர வேண்டும் - பாதிக்கப்பட்ட பெண் வழக்கு

Published On 2021-01-29 01:07 GMT   |   Update On 2021-01-29 01:07 GMT
தனது குழந்தையை பராமரிக்க மாத பராமரிப்பு தொகையாக ரூ.60 ஆயிரம் தர வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டம் துவாரசத் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் நேகி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக புகார் எழுந்தது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

எனவே பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளுமாறு உள்ளூர் கோர்ட்டில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தனது குழந்தையை பராமரிக்க மாத பராமரிப்பு தொகையாக ரூ.60 ஆயிரம் தர வேண்டும் என்று எம்.எல்.ஏ. மீது அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு எம்.எல்.ஏ.வுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News