செய்திகள் (Tamil News)
பாம்லானிவிமாப்

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளை பயன்படுத்த இந்தியா அனுமதி

Published On 2021-06-01 11:22 GMT   |   Update On 2021-06-01 11:22 GMT
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து உள்பட சில மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், எலி லில்லி நிறுவனத்தின் மருந்தை பயன்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செயல்பட்டில் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் உள்பட சில மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எலி லில்லி நிறுவனத்தின் இரண்டு மருந்துகளை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு எலி லில்லியின் பாம்லானிவிமாப் 700 மி.கி., எட்டெசெவிமாப் 1400 மி.கிராம் ஆகிய மருந்துகளை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

Similar News