செய்திகள் (Tamil News)
பிரதமர் மோடி

பயங்கரவாத ஆட்சி நிரந்தரமானதல்ல: பிரதமர் மோடி பேச்சு

Published On 2021-08-20 11:39 GMT   |   Update On 2021-08-20 11:39 GMT
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றி தலிபான்கள் ஆட்சியமைக்க தயாராகி வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி தலிபான் ஆட்சி குறித்து பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், தலிபான்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்குமா? என்பதுதான் தற்போதைய பேசும் பொருளாக சர்வதேச அளவில் உள்ளது.  இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் சில திட்டங்களுக்கு  பிரதமர் மோடி காணொலி வாயிலாக  அடிக்கல் நாட்டினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

அழிவு சக்திகள் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் பேரரசுகளை உருவாக்கும் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். அவர்களால் மனிதகுலத்தை ஒடுக்க முடியாது.

சோம்நாத் ஆலயம் பலமுறை இடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் சிலைகள் பலமுறை சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதை இருந்த இடம் தெரியாமல் அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும் அது மீண்டெழுக்கப்பட்டுள்ளது. இது நமக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

அழிவை நோக்கி அழைத்து செல்லும் சக்திகளும் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் சில காலத்திற்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால், மானுடத்தை அவர்களால் ஒடுக்கிவிட முடியாது. அவர்களின் இருப்பு நிரந்தரமானது அல்ல.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Similar News