இந்தியா
ராகுல் காந்தி

4 கோடி மக்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2022-01-24 08:08 GMT   |   Update On 2022-01-24 08:08 GMT
4 கோடி என்பது வெறும் எண்கள் இல்லை. உயிருள்ள மனிதர்கள் என ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் தவறான பொருளாதார செயல்பாடுகளால் இந்தியாவில் 4 கோடி போ் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது:-

நல்ல நேரம் வரப்போகிறது என கூறி ஆட்சியைப் பிடித்தவா்கள் என்ன செய்துள்ளாா்கள்? ‘நாம் இருவருக்கு மட்டுமே நலன்’ என்ற கொள்கையை பின்பற்றி நமது சகோதர, சகோதரிகளில் 4 கோடி பேரை வறுமை நிலைக்கு தள்ளியுள்ளனர். 4 கோடி என்பது வெறும் எண்கள் அல்ல. 

ஒவ்வொருவரும் நம் நாட்டில் வாழும் மனிதா்கள். பொருளாதாரரீதியாக சிறப்பாக வாழும் வாய்ப்பு இருந்தும் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜகவால் இந்தியாவுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

இந்தியாவில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 4 கோடி போ் வறுமை நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அதே சமயம் நாட்டில் உள்ள இரு பெரும் கோடீஸ்வரா்களின் சொத்து மதிப்பு அதீத வளா்ச்சியை அடைந்துள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்குமுன் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை பகிர்ந்து மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Similar News