விமானங்கள் முதல் பிரதமர் அலுவலகம் வரை போலி மிரட்டல்.. பயங்கரவாதம் குறித்து புக் எழுதிய ஆசாமி
- டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
- இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் உள்ளிட்ட இமெயில்களை அனுப்பியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்துக்கு போலி மிரட்டல் விடுத்து 100 ஈமெயில் வரை அனுப்பிய இளைஞர் போலீசில் பிடிப்பட்டுளார். சமீப காலமாக விமானங்கள், ஹோட்டல்கள் என நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 35 வயதான ஜெகதீஸ் என்ற நபர் பிரதமர் அலுவலகம், ரெயில்கள், விமானங்கள் என தொடர்ச்சியாக போலி ஈமெயில் மிரட்டல் விடுத்திருக்கிறார். பயங்கரவாதத்தை குறித்து எழுதிய டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் (Terrorism: A Demonic Storm) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை ஜெகதீஸ் எழுதியுள்ளார்.
இதை வெளியிடுவதற்கான முயற்சியில் மிரட்டல் விடுக்கும் ஈமெயில்களை அவர் அனுப்பத்தொடங்கியுள்ளார். முதலில் தனது புத்தகத்தை வெளியிட உதவுமாறு பிரதமர் அலுவகத்துக்கு மெயில் அனுப்பிய அவர் அதற்கு பதில் வராததால் இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் என்பது உள்ளிட்ட போலி மிரட்டல் மெயில்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது.