இந்தியா (National)
டெல்லி துணை மந்திரி மணீஷ் சிசோடியா

மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு எதிரானது-மணீஷ் சிசோடியா

Published On 2022-02-02 04:00 GMT   |   Update On 2022-02-02 04:00 GMT
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதியில் பாஜக தோல்வியடைந்துள்ளதாக டெல்லி துணை மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, நதிகள் இணைப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிராக எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதேபோல், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணை மந்திரி மணீஷ் சிசோடியா பட்ஜெட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மணீஷ் சிசோடியா கூறியதாவது:-

மத்திய அரசின் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது. இதனால், விவசாயிகளின் எண்ணிக்கையையும் மத்திய அரசு குறைத்து வருகிறது. எந்த பட்ஜெட்டிலும் விவசாயிகளுக்கு எதிரான அம்சம் இடம்பெற முடியுமா? இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்துள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதியிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது.

மத்திய அரசு கொரோனா தொற்று காலத்தில் கூட பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு சுகாதாரத் துறையின் பங்கு 2.14% ஆகவும், இந்த ஆண்டு 2.19% ஆகவும் இருந்தது. இது கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் உள்ளது.

இதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைகள் உருவாக்கப்படாத ஒரு திட்டத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளில் 60 லட்சம் வேலைகளை வழங்குவோம் என்று சொல்கிறார்கள். இதை அதிகரிக்க நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன், ஆனால் எதுவும் செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பட்ஜெட் எதிரொலி: அக்டோபர் 1 முதல் டீசல் விலை 2 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு

Similar News