இந்தியா (National)
கொரோனா தடுப்பூசி

கோவோவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்த மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

Published On 2022-03-09 13:17 GMT   |   Update On 2022-03-09 13:17 GMT
உலகளாவிய சோதனைகளில் நோவாக்ஸ் 90 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனை நிரூபித்துள்ளது என்று இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனாவாலா கூறினார்.
கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பெரியவர்கள் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனாவாலா கூறியதாவது:-

சீரம் ஆப் இந்தியாவின் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கான ஒப்புதல் விரைவில் பெறுவோம். உலகளாவிய சோதனைகளில் நோவாக்ஸ் 90 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனை நிரூபித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் பட்ஜெட் கொண்டு வந்த சத்தீஸ்கர் முதல்வர்
Tags:    

Similar News