இந்தியா (National)

ரொம்ப அருவருப்பா இருக்கு.. மாட்டிறைச்சி கொழுப்பு - திருப்பதி லட்டு விவகாரத்தில் சத்குரு சங்கடம்

Published On 2024-09-22 12:09 GMT   |   Update On 2024-09-22 12:09 GMT
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது அருவருப்பானது.
  • பக்தி இல்லாத இடத்தில புனிதத்தன்மையும் இருக்காது.

ஜக்கி வாசுதேவ்திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டுக்கள் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்று ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் காசை மிச்சப்படுத்த இந்த முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயடு குற்றம் சாட்டியுள்ளார். மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த திருப்பதி லட்டு விவகாரம் அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது அருவருப்பானது. இந்த சம்பவம் மிகவும் அருவருப்பூட்டுகிறது. இதனால்தான் கோவில்கள் அரசின் கட்டுபாட்டிலன்றி பக்தர்கள் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என்று கூறுகிறோம், பக்தி இல்லாத இடத்தில புனிதத்தன்மையும் இருக்காது.

பக்தியுள்ள இந்துக்கள் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மதகுரு ஜக்கி வாசுதேவ் கோவையில் ஈசா யோகா மையத்தை நிறுவி ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மதகுரு ரவி சங்கரும் லட்டு விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News