இந்தியா

பீகாரில் தலித் வீடுகள் தீ வைத்து எரிப்பு - எதிர்க்கட்சிகள் கண்டனம்

Published On 2024-09-19 14:36 GMT   |   Update On 2024-09-19 14:38 GMT
  • இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று
  • இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள 2 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நில தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலத்தகராறு தொடர்பாக மஞ்ஹி தோலா எனப்படும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள 21 குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் இத்தகைய அராஜகங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் நடக்கின்றன. இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

தலித்துகளின் குடிசை எரிக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News