இந்தியா

பேருந்து விழுந்த பகுதி

உத்தரகாண்டில் கோர விபத்து- சார் தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் 22 பேர் பலி

Published On 2022-06-05 17:19 GMT   |   Update On 2022-06-05 17:19 GMT
  • விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார்.
  • கங்கோத்ரி, யமுனோத்ரியில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சார்தாம் தலங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், முன்னெப்போதும் இல்லாத அளவு யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் யமுனோத்ரி நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்த 22 பக்தர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார். மேலும் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

6 மாத கால இடைவெளிக்குப் பிறகு கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது. அதன்பின்னர் கேதார்நாத்தில் மே 6 ஆம் தேதியும், பத்ரிநாத்தில் மே 8 ஆம் தேதியும் நடை திறக்கப்பட்டது.

Tags:    

Similar News