இந்தியா

டெல்லி மெட்ரோ ரெயிலில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் டாக்டர்

Published On 2023-12-12 16:03 GMT   |   Update On 2023-12-12 16:03 GMT
  • சமீப காலமாக இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்புக்கு பலியாகி வருகின்றனர்.
  • டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பால் இறந்தார்.

புதுடெல்லி:

கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்புகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. சமீப காலங்களில் மாரடைப்புக்கு இளைஞர்கள் அதிக அளவில் பலியாகி வருகின்றனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலைநகரில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பல்லப்கரில் இருந்து காஷ்மீர் கேட் வரை பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான சிக்கலால் ரயிலில் சரிந்து விழுந்தார்.

திடீரென மயங்கி விழுந்த அவருக்கு மற்றொரு பயணி முதலுதவி சிகிச்சை அளித்தார். டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள மூல்சந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில், அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வசித்து வந்த மயங்க கர்க் என்பதும், மகாராஷ்டிராவின் வார்தாவில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு தேர்வுக்காக பஞ்ச்குலாவுக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

டெல்லி மெட்ரோ ரெயிலில் 26 வயது டாக்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News