உ.பி. ஹத்ராஸில் மத பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலி
- ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா சத்சங் என்ற இந்துமத பிரசார கூட்டம் நடைபெற்றது.
- மத பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங் என்ற இந்துமத பிரசார கூட்டம் நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
அந்த மத பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் பஸ் மற்றும் வேன்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.