ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 3 பெண் வேட்பாளர்கள் வெற்றி
- தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த இரண்டு பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
- பா.ஜ.க.-வின் 29 வயது பெண் வேட்பாளர் 521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உமர் அப்துல்லா 2-வது முறையாக ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் மூன்று பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
முன்னாள் மந்திரியான சகீனா மசூத் தேசிய மாநாடு கட்சி சார்பில் குல்காம் மாவட்டத்தில் உள்ள டி.ஹெச். போரா சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சகீனா மசூத் 36,623 வாக்குகள் பெற்றா். 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் குல்சார் அகமது தார் என்பரை வீழ்த்தியுள்ளார்.
பா.ஜ.க. சார்பில் கிஷ்ட்வார் தொகுதியில் போட்டியிட்ட சகுன் பரிஹார், தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த சஜத் அகமது கிட்லூவை வீழ்த்தியுள்ளார். 29 வயதேயான ஷகுன் பரிஹார் 29,053 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் 521 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். சஜத் அகமது கிட்லூ 2002 மற்றும் 2008-ல் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் ஷமிம் ஃபிர்டோயஸ், பா.ஜ.க. வேட்பாளர் அசோக் குமார் பாட்-ஐ 9538 ஆயிரம் வாக்களக் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவர் ஸ்ரீநகரில் உள்ள ஹப்பாகடல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஷமிம் 12437 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் தேசிய மாநாடு கட்சி 1977-ல் இருந்து ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. ஷமிம் 2008 மற்றும் 2014 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
2014 தேர்தலில் இரண்டு பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். தற்போது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.