இந்தியா

2018-ல் இருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்: மத்திய அரசு தகவல்

Published On 2023-12-08 05:03 GMT   |   Update On 2023-12-08 05:11 GMT
  • கனடாவில் அதிகபட்சமாக 91 பேர் மரணம்.
  • பிரிட்டனில் 48 பேர் மரணம்

இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் படித்து வருகிறார்களா? என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவலை மத்திய மந்திரி வி. முரளீதரன் மக்களவையில் தெரிவித்தார்.

அப்போது, "408 இந்திய மாணவர்கள் கடந்த 2018-ல் இருந்து மரணம் அடைந்துள்ளனர். கனடாவில் அதிகபட்சமாக 91 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரிட்டனில் 48 பேரும், ரஷியாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும், சைபிரஸில் 14 பேரும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று எனத் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News