இந்தியா

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published On 2024-07-09 01:56 GMT   |   Update On 2024-07-09 01:56 GMT
  • கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் அதன்பிறகு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
  • கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிகிறது.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் அதன்பிறகு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டின் வழியே தப்பிச் சென்றனர். மேலும், சில பகுதிகளில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிகிறது.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News