இந்தியா

பெண் மருத்துவர் கொலை: நேற்று 50, இன்று 60.. தொடர்ந்து கூண்டோடு ராஜினாமா செய்யும் மருத்துவர்கள்

Published On 2024-10-09 12:42 GMT   |   Update On 2024-10-09 12:42 GMT
  • மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா.
  • கூட்டத்தை நடத்திய பின்னர் மொத்தமாக ராஜினாமா செய்தனர்.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். முன்னதாக ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அரசு மருத்துவமனையின் பல்வேறு துறைத் தலைவர்களின் கூட்டத்தை நடத்திய பின்னர் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மருத்துவர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

கொல்கத்தாவின் மையப்பகுதியில் ஏழு ஜூனியர் மருத்துவர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், அவர்களது சகாக்கள் ஒற்றுமையுடன் நடத்திய 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து, இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மூத்த மருத்துவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்தனர். 

Tags:    

Similar News