தலித் தம்பதியை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த கும்பல்.. செருப்பு மாலை அணிவித்த கொடூரம்
- மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- . இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் முங்காளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிளோரா கிராமத்தில் வசித்து வரும் வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அவர்மீது நேற்று முன்தினம் (மே 17) காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அந்த இளைஞரின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் இன்று (மே 20) அந்த இளைஞரின் வயதான தாய்-தந்தை கிராமத்துக்குள் வந்துள்ளனர்.
அப்போது அவர்களை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து 10 க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி செருப்புகளை கோர்த்து மாலையாக அவர்களின் கழுத்தில் அணிவித்திருக்கிறது.
இதனையடுத்து அந்த இடத்தில இருந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈவ் டீசிங் அந்த இளைஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசம், தலித், தாக்குதல், கிராமம், போலீஸ், வழக்குப்பதிவு