இந்தியா
null

நாட்டில் பலரை விட அதிகம் சம்பாதிக்கும் 'சிலர்'.. ஊதிய ஏற்றத்தாழ்வு மோடியின் பக்கோடா பாலிசி - கங்கிரஸ்

Published On 2024-11-29 09:46 GMT   |   Update On 2024-11-29 09:49 GMT
  • மேலே இருக்கும் 10 சதவீதத்தினர் கீழ்மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர்
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 ஊதிய அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

மக்களுக்கு வெறும் பக்கோடா குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அல்வா என மோடி அரசு செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இந்தியாவில் நிலவும் ஊதிய ஏற்றத்தாழ்வைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை வெளிப்படுத்தியதை முன்னிறுத்தி இன்றைய தினம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு எக்கனாமிக்ஸ்க்கு பதில் பிரதமர் மோடியின் பக்கோடா நாமிக்ஸ் [pakoda-nomics] ஏற்படுத்திய  நேரடி விளைவு என்று அவர் விமர்சித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை, இந்தியாவில் வருமானம் ஈட்டுவோரில் முதன்மையாக இருக்கும் 10 சதவீதத்தினர் கீழ்மட்டத்தில் கடைசியாக இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்று கூறுகிறது.இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் மற்றும் மியான்மர் உட்பட நமது அண்டை நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் விட இது மிகவும் சமமற்றது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அனைத்து குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது என அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

 

பெரும்பாலான தொழிலாளர்கள் சுயதொழில், வகைப்படுத்தப்படாத முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறைந்த ஊதியம் மற்றும் நிலையற்ற தன்மை நிலவுகிறது

இது பயாலஜிகளாக பிறக்காத பிரதமர் உருவாக்கிய பக்கோடா-நாமிக்ஸின் நேரடி விளைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெகுஜனங்களுக்கு பக்கோடாக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு அல்வா! என ஜெய்ராம் ரமேஷ் தாக்கியுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் , வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றுக்குப் பொருளாதாரத்தை அரசு முறையற்று கையாள்வதே காரணம் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

 

Tags:    

Similar News