இந்தியா

திருமணம் செய்யாமல் நழுவிய காதலனை கூலிப்படை வைத்து கடத்திய முரட்டு காதலி

Published On 2024-11-29 09:24 GMT   |   Update On 2024-11-29 09:24 GMT
  • விடுதி உரிமையாளரை கடத்திச் செல்வதை கண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • கடத்திச் சென்ற கார் அனக்கா பள்ளி மாவட்டம், வயல் பாடு அருகே செல்வதை அறிந்தனர்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணுகா நகரை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 31). இவர் திருப்பதி பெடகாப்பு தெருவில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. மதனப்பள்ளியை சேர்ந்த விதவையான சோனியா பானு என்பவருடன் சீனிவாசலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.

இந்த நிலையில் ஸ்ரீனிவாசலுக்கும், சோனியா பவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கடந்த 3 மாதங்களாக சீனிவாசலு, சோனியா பானுவுடன் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்தார். சீனிவாசலு தன்னை திருமணம் செய்யாமல் புறக்கணித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்ற அச்சம் சோனியா பானுக்கு ஏற்பட்டது.

ஸ்ரீனிவாசலுவை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி மதனப்பள்ளியை சேர்ந்த பாபா பக்ருதீன், மோகித், ராஜேஷ், ரியாஸ், சந்திப் ஆகியோரின் உதவியை நாடினார்.

கூலிப்படையை சேர்ந்த இவர்களிடம் ஸ்ரீனிவாசை கடத்துவதற்கு லட்ச கணக்கில் பேரம் பேசினார்.

நேற்று சீனிவாசலு தனது தங்கும் விடுதியில் இருந்தார். அப்போது சோனியா பானு கூலிப்படையை சேர்ந்தவர்களுடன் காரில் அங்கு வந்தார். தங்கும் விடுதியில் இருந்த சீனிவாசலுவை கூலிப்படையினர் உதவியுடன் குண்டு கட்டாக தூக்கிச் சென்றார். அவரை காரில் போட்டுக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.

தங்களது விடுதி உரிமையாளரை கடத்திச் செல்வதை கண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காரின் பதிவு எண்ணுடன் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தனிப்படைகள் அமைத்து காரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடத்திச் சென்ற கார் அனக்கா பள்ளி மாவட்டம், வயல் பாடு அருகே செல்வதை அறிந்தனர்.

போலீசார் 100 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சீனிவாசலுவை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

அப்போது இளம்பெண் முரட்டு காதலால் வாலிபரை கடத்தி சென்றது தெரியவந்தது. சோனியா பானு மற்றும் கூலிப்படையினரை கைது செய்தனர்.

Tags:    

Similar News