இந்தியா

மகா.வில் மாறிய காட்சி... திடீரென சொந்த ஊருக்கு ஜெகா வாங்கிய ஷிண்டே - முக்கிய மீட்டிங்கில் துண்டு

Published On 2024-11-29 10:42 GMT   |   Update On 2024-11-29 10:42 GMT
  • அமித் ஷா உடனான சந்திப்பு பாசிட்டிவ் ஆக அமைந்ததாக ஷிண்டே தெரிவித்தார்.
  • பட்னாவிஸ், ஷிண்டே, பவார் என மூன்று பேராக மும்பை திரும்பினர்.

மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஆளும் மாகயுதி [பாஜக 132, ஷிண்டே சேனா 57, அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

முதல்வர் பதவி மீண்டும் ஷிண்டேவுக்கா அல்லது பட்னாவிஸ்கா என்பதில் குழப்பம் இருந்தது. இந்நிலையில் முதல்வர் பத்வியை தான் விரும்பவில்லை என்றும் மோடியின் முடிவே இறுதியானது என்றும் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று தலைநகர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் ஒன்றாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்க மாட்டார் என்று அவரது கட்சியினர் தொடர்ந்த உறுதியாக கூறி வருகின்றனர். அமித் ஷா உடனான சந்திப்பு பாசிட்டிவ் ஆக அமைந்ததாக ஷிண்டே தெரிவித்தார்.

அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மாநில தலைநகர் மும்பையில் நடைபெறும் மகாயுதி கூட்டணியின் மற்றொரு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையிலதான் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று நடக்க இருந்த இந்த முக்கிய மீட்டிங் ஏக்நாத் ஷிண்டே ஆப்சென்ட் ஆனதால் கூட்டமே ரத்தாகியுள்ளது.

 

டெல்லி பயணத்துக்கு பின்னர் பட்னாவிஸ், ஷிண்டே, பவார் என மூன்று பேராக மும்பை திரும்பினர். ஆனால் ஏக்நாத் ஷிண்டே சாத்தாரா [Satara] மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு திடீரென சென்றுள்ளார். இதனால் இன்று நடக்க  இருந்த மீட்டிங்கே ரத்தாகி ஆட்சி மற்றும் அமைச்சரவை பங்கீட்டை தீர்மானிப்பதில் மேலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் பதவியை ஷிண்டே விட்டுக்கொடுப்பதாகக் கூறியிருந்தாலும் அமைச்சரவை பங்கீட்டில் திருப்தியின்மை இருப்பதாக மகாயுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் கூட்டத்தை புறக்கணித்து சொந்த ஊருக்கு சென்றுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News