இந்தியா

பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பிரதமர், முதல்வர் நிதியுதவி

Published On 2024-11-29 20:46 GMT   |   Update On 2024-11-29 20:46 GMT
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
  • இந்த விபத்தில் பலியானவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.

கோண்டியா-அர்ஜுனி சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

பஸ் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News