இந்தியா

நர்ஸிடம் அத்துமீறிய நோயாளி.. ஸ்கேன் ரூமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒரே இரவில் நடந்த கொடூரங்கள்

Published On 2024-09-01 11:59 GMT   |   Update On 2024-09-01 11:59 GMT
  • படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
  • நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தின் இன்னும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் அம்மாநிலத்தில் வெவேறு மருத்துவமனைகளில் பாலியல் துன்புறுத்தல் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்கம் - பீர்பும் மாவட்ட அரசு மருத்துவமனையில் இரவு டியூட்டியில் இருந்த நர்ஸுக்கு குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் இருந்த நோயாளி ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அந்த நோயாளிக்கு நேற்று இரவு டியூட்டியில் இருந்த நர்ஸ் குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்குத் தகவல் அளித்த நிலையில், அந்த நோயாளி கைது செய்யப்பட்டார்

இதேபோன்று நேற்று இரவு மேற்கு வங்கம் ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் வைத்து 13 வயது சிறுமிக்கு மருத்துவமனை ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவமனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர், நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், ஸ்கேன் அறையில் இருந்து தங்களது மகள் அழுதுகொண்டே ஓடிவந்து நடந்ததைச் சொன்னதாக தெரிவித்துள்ளனர், மேலும் இந்த விஷயம் மருத்துவமனை கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை அவர்கள் தாக்க முயன்ற நிலையில் சமய இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த நகரை மீட்டு கைது செய்தனர். இருப்பினும் மருத்துவமனையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News