இந்தியா (National)

அரியானாவில் படுதோல்வி.. ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக வெற்றி பெற்று ஆம் ஆத்மி அசத்தல்

Published On 2024-10-08 10:27 GMT   |   Update On 2024-10-08 10:27 GMT
  • ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார்.

இந்நிலையில், தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் தண்னி எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை விட 4538 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான அரியானாவில் ஒரு இடத்தை கூட வெல்லமுடியாத ஆம் ஆத்மி கட்சி ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக ஒரு தொகுதியை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News