கேரளாவிற்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்கவேண்டும்: தம்பிதுரை வலியுறுத்தல்
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
- கேரளாவிற்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 200-க்கு மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் தம்பிதுரை வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு ஏற்கனவே இந்த அவையில் கூறி இருக்கிறது.
ஆனால், எங்களது கோரிக்கை மறு சீரமைப்புகளுக்கான தொகையினையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதுதான்.
இதை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு, சிறப்பு நிவாரண தொகுப்பும் கேரளாவிற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.