ராணுவத்தில் அக்னிவீரர்... ஊருக்குள் வழிப்பறி கொள்ளையன் - வெளிவந்த திடுக்கிடும் பின்னணி!
- அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று அக்னி வீரரான இளைஞர் ஒருவர் வழிப்பறி கொல்லைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அக்னிவீரராக வங்க தேசத்தில் பணியாற்றி வந்த இஷ்மீத் சிங் வங்க தேசத்தில் பணியாற்றிவந்தார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள ராணுவவீரர்கள் ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் மீதான விமர்சனங்கள் வலுவடையத் துவங்கியுள்ளன. அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆனால் 25% பேர் மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்
இந்த திட்டம் இளைஞர்களைப் பயன்படுத்திவிட்டு அவர்களைத் தூக்கியெறியும் வகையில் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று அக்னி வீரரான இளைஞர் ஒருவர் வழிப்பறி கொல்லைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷ்மீத் சிங். பயிற்சிபெற்ற அக்னிவீரராக வங்க தேசத்தில் பணியாற்றி வந்த இஷ்மீத் சிங் கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுப்பில் பஞ்சாப் திருப்பிய நிலையில் மீண்டும் பணிக்கு செல்லாமல் தனது சகோதரர் பிரப்பிரீத் சிங் மற்றும் நண்பர் பால்கரன் சிங் ஆகியோருடன் இணைந்து நெடுஞ்சாலைகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
பஞ்சாபின் மொகாலியில் உள்ள பாலோங்கி பகுதியில் அறை ஒன்றை வாடைக்கு எடுத்துத் தங்கி அங்கிருந்தபடி சகோதரர் மற்றும் நபருடன் சேர்ந்து திருட்டு, கொள்ளை மற்றும் வழிபறிகளில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கான்பூரிலிருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கிய இஷ்மீத் சிங் கும்பல் அதைப் பயன்படுத்தி வாகனங்களில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாணையில் இஷ்மீத் சிங் கும்பல் சிக்கியுள்ளது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. அக்னி வீரராப் பயிற்சி பெற்ற ஒருவர் கொள்ளையனாக மாறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.