இந்தியா

அரசுப் பேருந்தில் ஏர் ஹோஸ்டஸ் போல பணிப்பெண்கள்- பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு திட்டம்

Published On 2024-10-03 10:37 GMT   |   Update On 2024-10-03 10:37 GMT
  • அரசு பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு
  • மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமித்து பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலெக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் இந்த பணிப்பெண்கள் அமர்த்தப்பட இருக்கின்றனர்.

முதற்கட்டமாக மும்பை-புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிப்பெண்கள் சிவ்னெரி சுந்தரி என்று அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பேருந்தில் ஏறும் பயணிகளை வரவேற்பது மற்றும் பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவது போன்ற வேலையில் ஈடுபடுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு பேருந்துகளின் மோசமான நிலை மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள மோசமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை அரசாங்கம் செய்கிறது என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் விஜய் தெரிவித்தார். 

Tags:    

Similar News