இந்தியா

ஒரே காற்று மாசு.. டெல்லியில் வாழ விருப்பமில்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஓபன் டாக்

Published On 2024-12-03 15:55 GMT   |   Update On 2024-12-03 15:55 GMT
  • இந்தியா ₹ 22 லட்சம் கோடி மதிப்பிலான புதைபடிவ [fossil] எரிபொருட்களை இறக்குமதி செய்கிறது
  • டெல்லியில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் தொடக்கத்தில் காற்றின் தரம் அதிகரித்துள்ளது

தலைநகர் டெல்லி காற்று மாசு பிரச்சனையால் திணறி வரும் நிலையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அதுகுறித்த ஓபன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், டெல்லி நகரில் எனக்கு வாழப் விருப்பமில்லை. இங்குள்ள மாசுபாட்டினால் எனக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும், டெல்லிக்கு வரும் போது, மாசு அளவு அதிகமாக இருப்பதால், போகலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைப்பதே காற்று மாசை குறைக்க சிறந்த வழி என்று தெரிவித்துள்ளார்.

 

இந்தியா ₹ 22 லட்சம் கோடி மதிப்பிலான புதைபடிவ [fossil] எரிபொருட்களை இறக்குமதி செய்கிறது, இது பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பார்வையிலிருந்து சவாலானதாக உள்ளது. மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் fossil எரிபொருட்களின் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.

 

மேலும் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகள் வறுமை, பட்டினி மற்றும் வேலையின்மை, எனவே வரும் காலங்களில், பொருளாதாரம் மற்றும் சமூக சமத்துவத்தை அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்

டெல்லியில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் தொடக்கத்தில் காற்றின் தரம் அதிகரித்துள்ளது. இன்று காலை டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 274 ஆக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News