இந்தியா

'சிறை வாழ்க்கையை இழக்கிறேன்'... 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமினில் வந்த 104 வயது முதியவர் நெகிழ்ச்சி

Published On 2024-12-04 06:01 GMT   |   Update On 2024-12-04 06:01 GMT
  • தண்டனையை எதிர்த்து ரசிக் சந்திரா மண்டல் 2018-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்தார்.
  • ரசிக் சந்திரா மண்டலை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.

புதுடெல்லி:

மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியை சேர்ந்தவர் ரசிக் சந்திரா மண்டல். இவர் 1988-ம் ஆண்டு தனது 68-வது வயதில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 1994-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து ரசிக் சந்திரா மண்டல் 2018-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்தார். அவரது மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் அவர் மீண்டும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு கடந்த மாதம் 29-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அந்த மனு மீது விசாரணை நடத்தியது.

பின்னர் ரசிக் சந்திரா மண்டலை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் மற்ற கைதிகளுடன் அமைதியாக வாழ்ந்து வந்த அவருக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து மால்டா சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரசிக் சந்திரா மண்டல் தனது மகன் உத்தமியின் கையை பிடித்து நெகிழ்ச்சியுடன் கூறுகையில், நான் வீட்டுக்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சிறை வாழ்க்கையை இழக்கிறேன் என்றார்.

Tags:    

Similar News