VIDEO: ஷிண்டே - அஜித் பவார் புடை சூழ ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்
- இவர் கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மகா. முதல்வராக இருந்தவர் ஆவார்.
- பதவியேற்பு விழா நாளை [ டிசம்பர் 5] மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கிறது
மாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. ஷிண்டே - பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஷிண்டே இறங்கி வந்த நிலையில் இன்று மும்பையில் நடந்த பாஜக இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டத்தில் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மகா. முதல்வராக இருந்தவர் ஆவார். இந்நிலையில் நாளை மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் மகாராஷ்டிர முதல்வர் ஆக பதவியேற்க உள்ளார். இன்று மதியம் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சியமைக்கத் தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரியுள்ளார். இந்த சந்திப்பில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உடன் இருந்தனர்.
அவர்கள் இருவரும் துணை முதல்வர் பதவியை ஏற்பார்கள் என்று தெரிகிறது. ஆளுநரை சந்தித்தபின் செய்தியர்களிடம் பேசிய பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஒத்துழைப்பு நல்கிய ஷிண்டேவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழா நாளை [ டிசம்பர் 5] மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.