அநீதிக்கு இஸ்லாம் இடமளிக்காது.. வங்கதேச இந்துக்கள் மீதான வன்முறைக்கு டெல்லி 'ஜும்மா மசூதி' கண்டனம்
- இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான அநீதிகள் கண்டிக்கத்தக்கவை
- ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் நாங்கள்தான்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு டெல்லியில் உள்ள பிரபல ஜும்மா மசூதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ் இந்த அநீதிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜும்மா மசூதியின் தலைமை ஷாஹி இமாம் சையது அகமது புகாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வங்கதேசம் உருவாக்கப்பட்டதிலிருந்து, நமது தேசியத் தலைமையும் பொது சமூகமும் அந்நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்திருக்கிறது. இராஜங்கம், பிராந்திய விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் மற்றும் முஸ்லீம் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் வங்கதேசம் எப்போதும் நெருங்கிய நட்பு நாடாக எங்களுடன் நிற்கிறது.
இந்த சூழல் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான அநீதிகள், தாக்குதல்கள் மற்றும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை. வங்கதேசத்தின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் நாங்கள் ஆற்றிய பங்கையும் அவ்வரசாங்கம் எப்போதும் நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் நாங்கள்தான்.
நம்பகமான அண்டை நாடாக விளங்கும் வங்காள தேசத்தின் நெருங்கிய, வங்கதேசத்தின் தற்போதைய தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ், இந்து சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
அவரது சர்வதேச நற்பெயர் கறைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடாக, இஸ்லாமும் இஸ்லாமிய சட்டமும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவிதமான வெறுப்புக்கும் அல்லது அநீதிக்கும் இயல்பிலேயே இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார்.