இந்தியா
இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது: அஸ்வினி வைஷ்ணவ்
- மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.
- அப்போது, ஒவ்வொரு ரெயில் டிக்கெட்டுக்கும் 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு ரெயில் டிக்கெட் 100 ரூபாய் என்றால் பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. மீதம் 46 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதன்மூலம் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது என தெரிவித்தார்.
மேலும், விரைவு ரெயில் சேவை குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் விரைவு ரெயில் சேவை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதன் சிறப்பான சேவை பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என குறிப்பிட்டார்.