இந்தியா

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்- துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்

Published On 2023-07-02 09:15 GMT   |   Update On 2023-07-02 09:45 GMT
  • ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்.

மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார்.

9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்கிறார்.

Tags:    

Similar News