இந்தியா

சர்வதேச மகளிர் தினம்: பெண்கள் மட்டுமே இயக்கிய வந்தே பாரத் ரெயில்

Published On 2025-03-09 01:09 IST   |   Update On 2025-03-09 01:09:00 IST
  • வந்தே பாரத் ரெயிலை பெண் லோகோ பைலட்டுகள் மட்டும் இயக்கினர்.
  • அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி:

சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில் எண் 22223, சி.எஸ்.எம்.டி-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், லோகோ பைலட் முதல் டிக்கெட் பரிசோதகர் வரை பெண்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு ரெயிலை பெண் லோகா பைலட் சுரேகா யாதவ், உதவி லோகோ பைலட் சங்கீதா குமாரி ஆகியோர் இயக்கினர்.

இதில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரெயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில் பணிப்பெண்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.

மத்திய ரயில்வே பயணிகள் ரயில் மேலாளர் ஸ்வேதா கோன், ஒரு பெண் பிரசவம் போன்ற கடினமான பணியைச் செய்ய முடிந்தால், அவரால் எதுதான் செய்ய முடியாது? ஒரு பெண் திறமையானவராக மாறும்போது அவர் தனது முழு குடும்பத்தையும் உயர்த்த முடியும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News