இந்தியா (National)

அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு ரெயில்வே துறையுடன் கூடுதலாக 2 துறைகள் ஒதுக்கீடு

Published On 2024-06-10 15:41 GMT   |   Update On 2024-06-10 15:41 GMT
  • பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
  • ரெயில்வே துறையில், பல்வேறு விபத்துகள், பராமரிப்பில் ஏளனம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

நேற்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்றார்.

இந்நிலையில் ரெயில்வே துறை அமைச்சராக மீண்டும் அஷ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெயில்வே துறையில், பல்வேறு விபத்துகள், பராமரிப்பில் ஏளனம், ரிசர்வ் இருக்கைகளில் ரிசர்வ் செய்யாத பயணிகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கடும் விமர்சனத்திற்கு உள்ளான ரெயில்வே துறையை தனியாக கவனிக்கும் வகையில் அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ஆனால் மேலும் 2 துறைகளுடன் ரெயில்வேக்கு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அஷ்வினி வைஷ்ணவுக்கு ரெயில்வே , தகவல் ஒலிபரப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஐடி ஆகிய 3 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News