இந்தியா

சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமற்றது- மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு

Published On 2024-09-10 08:34 GMT   |   Update On 2024-09-10 08:34 GMT
  • சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது.
  • உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

புதுடெல்லி:

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் அமைப்பு தின விழா டெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முன்முயற்சிகளை அவர் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் குறைப்பு மையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தற்போதுள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமற்றது. தொழில் நுட்பம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பத்தின் காரணமாக பல அச்சுறுத்தல்களைக் காண முடிகிறது. சைபர் குற்றத்துக்கு எல்லை இல்லை. எனவே அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது. சைபர் குற்றங்களை எதிர்கொள்ள அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags:    

Similar News