இந்தியா

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாயா? - சர்ச்சையான வருமான சான்றிதழ்

Published On 2024-10-01 11:31 GMT   |   Update On 2024-10-01 11:31 GMT
  • ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என தாசில்தார் ஒருவர் வழங்கிய வருமான சான்றிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • வெறும் 2 ரூபாய் ஆண்டு வருமானத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழமுடியும் என்று விமர்சனங்கள் எழுந்தது.

மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என தாசில்தார் ஒருவர் வழங்கிய வருமான சான்றிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 2 ரூபாய் ஆண்டு வருமானத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழமுடியும் என்று விமர்சனங்கள் எழுந்தது.

திசு சாதர் என்பவரின் குடும்பத்திற்கு தான் ஆண்டு வருமானம் 2 ரூபாய் என கடந்த ஜனவரி மாதம் வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களது குடும்பத்தில் மொத்தம் 5 பேர். வறுமையால் அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.

திசு சாதரின் இளைய மகன் பல்ராம் சாதர், தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது படிப்பை தொடர்வதற்கு உதவித்தொகை விண்ணப்பித்திருக்கிறார். இதற்காக வருமான சான்றிதழ் ஒன்றை அவர் பெற்றிருக்கிறார். அதில் தான் ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு உதவித்தொகை கிடைக்காததை குறித்து ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்த போது தான் இந்த தகவல் அவருக்கே தெரிய வந்துள்ளது.

வருமான சான்றிதழ் குறித்து பேசிய பல்ராம், "பொது சேவை மையம் மூலம் ஆண்டுக்கு 40,000 ரூபாய் வருமானம் பெறுவதாக தான் சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அதில் ஆண்டு வருமானம் தவறுதலாக 2 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை யாருமே கவனிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

இப்போது தவறாக அச்சடிக்கப்பட்ட வருமான சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு மற்றொரு வருமான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News